
தமிழக போக்குவரத்து துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, விழுப்புரம், சேலம் என எட்டு மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கான காலி பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது போக்குவரத்து கழகங்களில் உள்ள 1,619 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது முதற்கட்டமாக ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்க்கான 685 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சா.சி. சிவசங்கர் அறிவித்து உள்ளார்.
Also Read >> வந்தாச்சி குட் நியூஸ்! இனிமே ரேஷன் கடைக்கு பணம் எடுத்துகிட்டு போக தேவையில்லை! புதிய வசதி அறிமுகம்! என்னானு படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!
மேலும், போக்குவரத்து கழகங்களில் கருணை அடிப்படையில் பணி வழங்குவதை விரைந்து செயல் படுத்த வேண்டும் என்றும், அதோடு பணி புரியும் ஊழியர்களுக்கு வாகன பராமரிப்பு ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பதை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 ஆகஸ்ட் மாதம் வரை ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் நிலுவைத்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நன்றி
Publisher: jobstamil.in
