நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த, எதிர்க்கட்சியினர் `I.N.D.I.A’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி, ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, சரத் பவார் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களை நடத்துவது, அதற்கான துணைக் குழுக்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “I.N.D.I.A கூட்டணியாக நாங்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தைப் பிடிக்கப்போகிறோம். இப்போது நாங்கள் அவரது தொண்டையைப் பிடித்திருக்கிறோம். விரைவில் அவரை அகற்ற வேண்டும்.
பெரும் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட என்.சி.பி தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரை பா.ஜ.க தன்னுடன் சேர்த்துக்கொண்டது. உண்மையில், பிரதமர் மோடி ஊழல்வாதிகளின் ஒருங்கிணைப்பாளர். எனவே, இது தொடர்பாக விவாதிக்க வெள்ளிக்கிழமை இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் சந்திப்போம். இந்தக் கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சி கூட்டணியின் அதிகாரபூர்வ பொது சின்னத்தை வெளியிடலாம், தேர்தலுக்கான மாநிலங்களில் சீட் பகிர்வு குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com
