முன்னதாக, 3 மணிக்கு தொடங்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை தாமதத்தால் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு தொடங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி மாலை சுமார் 6 மணி அளவில் முடிவுக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியின் நிறைவாக பாடப்படவேண்டிய ‘நாட்டுப்பண்’ இசைக்கப்படாமலேயே நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இதற்கிடையில், விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து வரவேற்ற மாவட்ட ஆடசியர் ஜெயசீலன், கடனுதவி வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
