
தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 5,705 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலும் பண்டிகை காலங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுவது இயல்பான ஒன்று. தற்போது தமிழகத்தில் தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ. 5700 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் இரண்டாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது.
Also Read >> குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு அதிரடி தீபாவளி போனஸ்! முதல்வர் உத்தரவு…!
அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 45,640 ஆகவும், ஒரு கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 5,705 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை போல 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,225 ஆகவும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.49,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளி விலையானது சற்று குறைந்து உள்ளது. அதன் படி வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ரூ.77.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தீபாவளி பண்டிகை காரணமாக தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்க திட்டமிடுவோர் உடனே வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
நன்றி
Publisher: jobstamil.in
