"காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், அதற்கே பின்னடைவை

இஸ்ரேல் – ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் நடந்துவரும் போரில் 1,400 இஸ்ரேலியர்களும், 5,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு

இந்தப் போரின் விளைவாக இஸ்ரேல், காஸா பகுதிக்குச் செல்லும், தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள்கள், மருந்துகள் செல்வதைத் தடை செய்தது. சர்வதேச அரசியல் முன்னெடுப்பின் மூலம் ஐ.நா திரட்டிய உதவிகளை மட்டும் காஸாவுக்குள் செல்ல அனுமதித்தது.

ஒபாமா

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, “2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, இஸ்ரேல் – பாலஸ்தீனத் தலைவர்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக எந்தப் பேச்சுவார்த்தையையும் ஏற்படுத்த முயலவில்லை.

காஸாவில், இஸ்ரேல் அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் துண்டிக்கும் இஸ்ரேல் அரசின் முடிவு மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்குவது மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாகப் போராடும் பாலஸ்தீனிய மக்களின் மனப்பான்மையை மேலும் கடினப்படுத்தலாம். இதனால், இஸ்ரேல் வரும்காலங்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இஸ்ரேலின் தற்போதைய செயல்பாடுகள் இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவைக் குறைக்கும்.

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் – காஸா

இஸ்ரேலின் இதுபோன்ற நடவடிக்கைகள் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்ட நீண்டகாலமாக முயலும் முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. எல்லா வகையிலும் இஸ்ரேலுக்கு இது பின்னடைவாக முடியும்” என எச்சரிக்கும் விதமாகக் கூறியிருக்கிறார். ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவிவகித்தபோது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு முயன்றார்.

ஆனால் இறுதியில் அது தோல்வியடைந்தது. ஆனால், பாலஸ்தீனிய குழுவான ஹமாஸுடனான மோதல்களின் தொடக்கத்தில் இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கையை ஒபாமா ஆதரித்தார். எப்போது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் பாலஸ்தீனிய குடிமக்கள் கொல்லப்படும் சூழல் ஏற்பட்டதோ அப்போது, இஸ்ரேல் தனது ராணுவத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *