தேசியவாத காங்கிரஸ் யாருக்குச் சொந்தம்; தேர்தல் கமிஷன்

அஜித் பவாரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று கோரி, சரத் பவார் மாநில சபாநாயகரிடமும் மனு கொடுத்திருக்கிறார். இரு தரப்பினர் சார்பாக கொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள்மீது வரும் 6-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருக்கிறது. இதற்காக சரத் பவார் டெல்லிக்குச் செல்லவிருக்கிறார். தேர்தல் கமிஷனின் விசாரணையில் தானே நேரில் பங்கேற்கப்போவதாக சரத் பவார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சரத் பவார் அளித்த பேட்டியில், “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் யார் என்று அனைவருக்கும் தெரியும். விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு தேர்தல் கமிஷன் சம்மன் அனுப்பியிருக்கிறது.

சரத் பவார்சரத் பவார்

சரத் பவார்

எனவே நான் இதற்காக தேர்தல் கமிஷனில் ஆஜராவேன். சாமானிய மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம். சிலர் (அஜித் பவார்) மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஜனநாயகத்தில் அதற்கு உரிமை இருக்கிறது என்பதால், அது குறித்து நான் விமர்சிக்க தயாராக இல்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் யார் என்று மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் இதர பகுதியில் இருப்பவர்கள் அறிவார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தவித சமரமும் செய்துகொள்ள மாட்டோம். எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட செயல் திட்டம் குறித்து ஓரிரு நாள்களில் முடிவுசெய்யப்படும்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தெரியும்” என்று தெரிவித்தார். ஏற்கெனவே சிவசேனா இரண்டாக உடைந்தபோது, அதிக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்த ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்தது. அது போன்ற ஒரு நிலைதான் சரத் பவாருக்கும் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *