மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டுக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. இதையடுத்து ஜல்னா என்ற இடத்தில் கடந்த வாரம் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், போலீஸார் தடியடி நடத்தினர். இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

தடியடி சம்பவத்துக்காக மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார். நாட்டில் தற்போது இட ஒதுக்கீடு அதிகபட்சம் 50 சதவீதமாக இருக்கிறது. இதனைக் காரணம் காட்டி மாநில அரசு மராத்தா சமுதாய மக்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. இந்த நிலையில், இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், `இட ஒதுக்கீட்டில் நடைமுறையிலிருக்கும் 50 சதவிகித உச்சவரம்பை ரத்து செய்யவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அதிக சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் வகையில் தற்போது இருக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்சவரம்பை ரத்து செய்துவிட்டு, இட ஒதுக்கீட்டை மேலும் 15 முதல் 16 சதவிகிதம் வரை அதிகரிக்கவேண்டும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்திருக்கிறார்” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்க்கட்சிகள் நினைத்துக்கொண்டிருந்தன.
ஆனால் மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில், சரத் பவார் கலந்துகொண்ட பிறகு இந்தச் சந்தேகம் தீர்ந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com