
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னனியில் உள்ளது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட 4வது டெஸ்ட் போட்டியானது வருகிற 23 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது.
இந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரரான ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஒய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 2வது டெஸ்ட் போட்டியிலேயே பும்ராவிற்கு ஒய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு பதிலாக மற்றொரு பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நடக்கும்போகும் 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்ற தகவலும் தெரிய வரும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
