SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், “பல காலமாக முஸ்லீம் லீக் கட்சி வெற்றிபெறும் வார்டாகவே மொக்ரால்புத்தூர் பஞ்சாயத்தின் 14 ஆம் வார்டு இருந்துவந்தது. ஆனால் கடந்த தேர்தலில் எங்கள் SDPI கட்சியின் வேட்பாளராக தீக்ஷித் போட்டியிட்டு வார்டில் 60 சதவிகிதம் வாக்குகளையும் பெற்று அமோக வெற்றிபெற்றார். இது முஸ்லீம் லீக் கட்சியினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதன் தொடர்ச்சியாகத்தான் தீக்ஷித்துக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது என்பதனை பயன்படுத்தி அவரை ஏமாற்றி, கையெழுத்து வாங்கி, பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. இதைப் பற்றி நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவுள்ளோம்” என கூறினார்கள்.

வாசிக்கத் தெரியாத பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை இப்படி ஏமாற்றி ராஜினாமா செய்யவைத்தது, கேரளாவில் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பதவியிலிருந்து நீக்கப்பட்ட இவர், தற்போது தனது ராஜினாமாவை ரத்து செய்யக் கோரி, மாநில தேர்தல் ஆணையத்தை அணுகத் திட்டமிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
