தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு; நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

There are many professions; Fewer industrial estates; Delay in changing land classification  தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு;   நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

கே.புதுார், உறங்கான்பட்டி, கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டைகளில் 500 தொழில் நிறுவனங்கள்செயல்படுகின்றன. ஆனால் மற்ற இடங்களில் அந்தந்த தொழில் செய்யும்நிறுவனங்கள் குழுமமாக செயல்படுவதற்கான நிலம் கிடைப்பது கடினமாக உள்ளதாக மடீட்சியா தலைவர் லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஜெய்ஹிந்துபுரத்தில் 2000 குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றை தனி எஸ்டேட் ஆக வெளியே கொண்டு செல்ல வேண்டுமெனில் போதுமான இடவசதியுடன் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.

மதுரையில் 15 கி.மீ., சுற்றளவு வரையே நகராக உள்ளது. அதைதாண்டி அத்தனையும் கிராமங்கள்தான். கிராமங்களில் விவசாய நிலம் வாங்கினாலும், அதை தொழில் செய்வதற்கான வகைப்பாட்டு மாற்றம் செய்ய ஆகும் செலவு அதிகம் என்பதுடன், காலவிரயமும் ஏற்படுகிறது.

‘சிப்காட்’ என்றால் அரசே எல்லா வசதியும் செய்து தந்து விடும். தனியார் தொழிற்பேட்டை அமைக்கவேண்டும் என்றால் தனிநபர்களிடம் இருந்துதான் நிலம் வாங்க வேண்டும். மொத்தமாக இடம் வாங்கி அதை எஸ்டேட் ஆக மாற்றி ரோடு வசதி செய்யும் போது நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாகி விடும்.

இது தொழில் நிறுவனங்களுக்கு சுமையாக உள்ளது. அதற்கு பதிலாக அரசே புறம்போக்கு இடத்தை தர வேண்டும். தொழில் நிறுவனங்களை நகருக்கு உள்ளே இருந்து வெளியே கொண்டு செல்ல மாவட்ட தொழில் மையம் 75 சதவீத மானியம் வழங்குகிறது.

தொழில் நிறுவனங்கள்தொழிற்பேட்டை அமைக்க முன்வந்தால் தமிழக அரசு 90 சதவீதமானியம் வழங்க வேண்டும். அதன் மூலம் மதுரையில் தொழில் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும், என்றார்.

கே.புதுார், உறங்கான்பட்டி, கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டைகளில் 500 தொழில் நிறுவனங்கள்செயல்படுகின்றன. ஆனால் மற்ற இடங்களில் அந்தந்த தொழில் செய்யும்நிறுவனங்கள் குழுமமாக செயல்படுவதற்கான


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.
-->