உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி எழுமலையான் கோவில் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலின் ஒரு நாள் உண்டியல் காணிக்கையே பல லட்சம் என்பதால் உலக பணக்கார கோவில்களில் திருப்பதியும் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், வருடந்தோறும் திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு பிரம்மோற்சவம் நடைபெறும் நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கைத்தை விட பலமடங்காக இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு திருப்பதி கோவிலில் 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில், ஒரு பிரம்மோற்சவம் கடந்த கடந்த 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மிக விமர்சியாக நடத்தப்பட்டது.
Also Read : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் பேய்மழை..! வானிலை ஆய்வு மையத்தின் புதிய தகவல்!!
இதையடுத்து, அடுத்த பிரம்மோற்சவமானது இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த பிரம்மோற்சவம் வருகிற 23 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறும். இன்று தொடங்கப்பட உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் கடைசி நாளான 23 ஆம் தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in
