Live சொத்துக் குவிப்பு வழக்கு: “பொன்முடிக்கு 3 ஆண்டுகள்

“பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை”

“பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” –  என்.ஆர்.இளங்கோ வாதம்

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக நீதிமன்றத்தில் நீதிபதி வருகைக்கு பின், “பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” என என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன்வைத்துள்ளார். மேலும் அவரின் மருத்தவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி!

இந்த வழக்கில், இன்று பொன்முடியும், அவரது மனைவியும் ஆஜராகி உள்ளனர். பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அஸ்வின் ஆஜராகி உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கறிஞர் முத்து மீரான் ஆஜராகி உள்ளார்.

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில்,”2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 சொத்து சேர்த்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,”லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை” எனக் கூறி இருவரையும் 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது.

அமைச்சர் பொன்முடி

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி, “பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இருவரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *