தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை” என்று போட்டு உடைத்தார். இந்த நிலையில், மனைவி தன் மீது புகார் கொடுத்துள்ளார் என்று தெரிந்த அடுத்த நிமிடமே தானும் பத்திரிகையாளர்களை சந்திக்க போவதாக கூறினார்.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும், என் குழந்தைகளுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்னையும், கருத்து வேறுபாடும் கிடையாது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல்பேரில், தாரமங்கலம் ஒன்றியம், கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து, கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் முன்பு ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது எல்லாம் கருத்தில் கொண்டு சி.பி.சி.ஐ.டி உடனடியாக என்னை அழைத்து விசாரிக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நாள்கள் கடந்து போகபோக, நீர்த்து போய் வருகிறது. அதுமட்டுமல்லாது எடப்பாடி பழனிசாமி கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க புள்ளி ஒருவரை வைத்து பேரம் பேசுவதற்கு வந்தார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. எனக்கு கொடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
