நெல்லை மாவட்டத்தில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நெல்லை நீதிமன்றத்தில் பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு வந்திருக்கும் சூழலில், சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விசாரித்தால், “சஸ்பெண்ட் செய்து ஆறு மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி, தவறு இல்லாத பட்சத்தில் சஸ்பெண்ட் ஆர்டர் ரத்துசெய்யப்பட வேண்டும். இப்போது நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணைக்கு வந்துவிட்டது.

எனவே, சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்தாகிவிட்டது. ஆனாலும் பல்வீர் சிங்குக்கு தற்போது வரவிருக்கும் எஸ்.பி பதவி உயர்வு வழங்கப்படாது” என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால் பல்வீர்சிங் மீது கருணை காட்டியதற்கு ‘வடக்கு லாபி’தான் காரணம் என்ற தகவலும் டி.ஜி.பி அலுவலகத்தைச் சுற்றி வட்டமடிக்கிறது. “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய சைலேஷ் குமார் யாதவுக்குப் பதவி உயர்வு வழங்கியபோதும் இதே காரணத்தைத்தான் சொன்னார்கள். இப்போதும் இதையேதான் சொல்கிறார்கள். இதெல்லாம் மேலிடத்து அரசியல்” என்று முணுமுணுக்கிறார்கள் காக்கி வட்டாரத்தில்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
