அதோடு மனுமீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதில் ரோஹித் பவார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அக்ஷய் ஷிண்டே, “மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு முறை மட்டும் அவசரமாக ஆய்வு செய்துவிட்டு, அவர்கள் தெரிவித்தபடி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக்கூட பார்க்காமல், 72 மணி நேரத்தில் மூடும்படி உத்தரவிட்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், “பாராமதி அக்ரோ நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றவேண்டியது அவசியம்” என்று வாதிட்டனர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பாராமதி அக்ரோ நிறுவனத்தை மூட பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்த நீதிபதிகள், “மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவில் பல பிழைகள் இருக்கின்றன. தீர்ப்பு சமநிலையில் இல்லை. நிலத்தடி நீரில் தற்போதைய மாசுபட்ட அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

விதிமுறைகள் மீறப்பட்ட அளவு, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல், அதனை சரி செய்வதற்கான மாற்றுவழிகள் போன்ற அம்சங்களையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் இதனை புதிதாக ஆய்வுசெய்து முடிவு எடுக்கும்படி உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர். மேலும், “ஒரே ஆய்வில் அனைத்து விதிமுறை மீறல்களையும் தெரிந்துகொள்ள முடியுமா?” என்று கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு மாற்று நடவடிக்கை எடுக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை” என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
