மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் நாளை முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், இன்று முதலே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்.15ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயரில் நாளை காஞ்சிபுரத்தில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஆறு லட்சம் பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் ஒன்று மற்றும் சிலரது வங்கிக் கணக்கில் 10 பைசா வரவு வைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் இன்று தொடங்கியுள்ளது. மகளிரின் வங்கிக் கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ள, நிலையில் அதற்கான மெசேஜ் வங்கியில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளை மாலைக்குள் அனைவருக்கும் ரூ.1000 முழுவதுமாக வழங்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலை அடுத்து இன்று முதலே அந்த பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தங்கள் வங்கிக் கணக்கில் பணம் ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தங்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ள விஷயத்தை சக பெண்களிடம் கூறி இல்லத்தரசிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com
