மின்சார ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மின்சார ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! 2

சென்னை எழும்பூர் வழித்தடத்தில பரங்கிமலை ரெயில் நிலையத்துல இருக்குற தண்டவாளத்த பராமரிப்பு வேல நடக்குறதனால நாளைக்கி (31 ந் தேதி) காலையில 10.45 to மதியம் 3.45 மணி வரைக்கும் மொத்தமா 54 மின்சார ரெயில் சேவை ரத்து ஆக போகுது.

சென்னை கடற்கரையில இருந்து தாம்பரம் வரை நாளைக்கு காலையில 10.18 மணியிலிருந்து மதியம் 2.45 வரை போகுற 19 மின்சார ரெயில் எல்லாம் ரத்து பண்றாங்க. மறுமார்க்கமா தாம்பரத்தில இருந்து சென்னை கடற்கரைக்கு காலையில 9.08 மணியிலிருந்து 3.20 வரைக்கும் வர 17 மின்சார ரெயில் ரத்து செய்யுறாங்க.

அதே மாதிரி சென்னை கடற்கரையில இருந்து செங்கல்பட்டுக்கு கலையில 10.56, 11.40, அப்புறமா மதியமா 12.20, 12.40, 1.45, 2.15, 2.30 மணிக்கு புறப்படுற ரெயில் ரத்து. மறுமார்க்கமா, செங்கல்பட்டுல இருந்து சென்னை கடற்கரைக்கு காலையில 11 மணி, 11.30, 12 மணி, 1 மணி, 1.45, 2.20 மணி நேரத்துல புறப்படுற ரெயிலும் ரத்து.

Also Read >> கர்ப்பிணி பெண்களே… உதவித்தொகையா ரூ.5000 தராங்களாம்! தமிழக அரசின் புதிய திட்டம்…!

இதே மாதிரி, திருமால்பூரில் இருந்து காலையில 11.05 மணிக்கு சென்னை கடற்கரை வழியா போற மின்சார ரெயில் அப்புறம் சென்னை கடற்கரையில இருந்து மதியமா 1 மணிக்கு அரக்கோணம் போற ரெயில், செங்கல்பட்டில இருந்து காலையில 10 மணிக்கு கும்மிடிப்பூண்டி போற ரெயில், தாம்பரத்திலிருந்து மதியமா 2.57 மணிக்கு சென்னை கடற்கரை வழியா வர ரெயில், காஞ்சீபுரத்தில இருந்து காலையில 9.30 மணி அளவுல சென்னை கடற்கரைக்கு வர மின்சார ரெயில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ரத்து பண்றாங்களாம்.

ரெயில் பயணிகளோட வசதிக்கு தாம்பரம் to செங்கல்பட்டுக்கு காலையில 11.51, மதியம் 12.35, 1.15, 1.35, 1.55, 2.45, 3.10, 3.30 மணி இந்த நேரத்துல சிறப்பு ட்ரைன் விடுறாங்களாம்.

அதே மாதிரி, மறுமார்க்கமா செங்கல்பட்டு to தாம்பரத்துக்கு காலையில 9.30, 11.30, மதியமா 12 மணி, 1 மணி, 1.45, 2.20 மணி நேரத்துல சிறப்பு ரெயில் வருமாம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *