குஜராத் கடற்பகுதி அருகே நடுக்கடலில் எண்ணெய்க் கப்பல் மீது

அரபிக் கடலில் இன்று டேங்கர் கப்பல் ஒன்று ஆயில் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது திடீரென அக்கப்பல் மீது டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பல் தீப்பிடித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அரபிக் கடல் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது நடத்தப்பட்ட இத்தாக்குதல் இந்தியாவை குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்புதான் மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்தினர்.

அக்கப்பலில் காயம் அடைந்திருந்த இந்திய மாலுமியை இந்திய கடற்படை மீட்டது. இச்சம்பவம் நடந்த ஓரிரு நாள்களில் அரபிக்கடலில் கப்பல் மீது டிரோன் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 20 இந்திய கப்பல் மாலுமிகள் இருந்தனர். சரக்கு கப்பலை பின் தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல் ஒன்றும் சென்று கொண்டிருந்த போது போர்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தூரத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் இத்தாக்குதல் குறித்து பிரிட்டன் ராணுவ தொழில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில்,  நடுக்கடலில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் லிபியாவில் பதிவு செய்யப்பட்டது ஆகும். அக்கப்பல் இஸ்ரேலுக்கு சொந்தமானது. அதன் மீது வான் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் என்பதால் அதன் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

காஸா நகரத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று உலக நாடுகள் இஸ்ரேலுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது. ஆனால் போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்க இஸ்ரேல் மறுத்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் கப்பலை ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *