டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு! இறுதி பதில்கள் வெளியீடு…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு! இறுதி பதில்கள் வெளியீடு… 2

குரூப் 4 தேர்வானது 2022 ஜுலை 24 ல் நடந்தது. அதன் முடிவுகளும் வெளியானது. இந்நிலையில் குரூப் 4 தேர்வின் இறுதி கீ பதில்கள் வெளியிடப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து வி.ஏ.ஓ. பில் கலெக்டர், ஸ்டெனோ உள்ளிட்ட 10 ஆயிரத்து 117 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2022 ஜுலை 24 ல் நடைபெற்றது. அந்த தேர்வில் மதுரையை சேர்ந்த ஸ்ரீகண்மணி, கீதா என இருவரும் பங்கேற்றனர். மேலும் தேர்வின் முடிவானது 2023 மார்ச் 24 ஆம் தேதி வெளியானது.

இதனை தொடர்ந்து தங்கள் இருவருக்கும் குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும், விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடந்து உள்ளதாகவும் மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்தனர். மேலும் அவர்கள் மனுவில் தங்களுக்கு விடைத்தாள் நகலையும் (ஓ.எம்.ஆர்.,சீட்)
வழங்க வேண்டும் என்றும் இரு பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

Also Read >> ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இதை நேற்று விசாரித்த நிலையில் நீதிபதி ஆர்.விஜயகுமார் “இறுதி கீ பதில்களை வெளியிடவில்லை என்றால் உடனடியாக வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டார். இதற்கு டி.என்.பி.எஸ்.சி “இறுதி கீ பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது” என்ற பதிலை அளித்து உள்ளது. இதை பதிவு செய்த நீதிபதி அவர்கள் மனுதாரர்களுக்கு ஒரு வாரத்தில் விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *