அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்” என விளக்கமளிக்க முன்வந்தார்.
அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்து, “தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தி.மு.க உறுப்பினருடைய கருத்துடன் உடன்படுகிறீர்களா என்பதைக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும்” எனப் பேசினார்.
இதற்கு மத்தியில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்தி ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம். எம்.பி அப்துல்லா பேசியதிலும், பெரியாரின் கருத்திலும் என்ன தவறு இருக்கிறது? அது ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” எனக் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு நடுவே குறுக்கிட்ட அமித் ஷா, “திருச்சி சிவா தி.மு.க சார்பில் பேசுகிறாரா அல்லது இந்தியா கூட்டணி சார்பில் பேசுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், எம்.பி திருச்சி சிவாவின் கருத்துக்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com
