இந்த அவசர எச்சரிக்கை செய்தி உங்களுக்கும் வந்ததா..? உடனே நீங்கள் செய்ய வேண்டியவை..!!

இந்த அவசர எச்சரிக்கை செய்தி உங்களுக்கும் வந்ததா..? உடனே நீங்கள் செய்ய வேண்டியவை..!!

பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக, தற்போது காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் இயற்கை பேரிடர் அச்சுறுத்தல்கள் உள்ளன. திடீர் வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய நெருக்கடியான தருணங்களில் மக்களுக்கு அலார்ட் செய்யும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கு ‛எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்’ ஒரு ‛பீப்’ சத்தத்துடன் சென்றடைந்தது. அந்த மெசேஜில், ‛‛இந்த மெசேஜ் என்பது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் செல் பிராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசேஜை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். இதற்கு ரீப்ளே எதுவும் செய்யவில்லை.

இந்த மெசேஜ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், இந்தியா முழுவதும் எமர்ஜென்சி அலர்ட் விடுக்கும் பரிசோதனைக்கானது. இது அவசர காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்கூட்டியே எமர்ஜென்சி அலர்ட் செய்வதற்கான சோதனையை மேற்கொள்ள இந்த மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *