Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 20 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் (அக்டோபர் 20) முடிவடைவதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. இந்நிலையில், இதுவரை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நாளையே அவசர வழக்காக விசாரிக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
The post தொடர்ந்து தள்ளுபடியாகும் ஜாமீன் மனு..!! சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
