ஆனால், காங்கிரஸ் கட்சி தனது முடிவுக்கான காரணத்தை மிகவும் தெளிவாக முன்வைத்திருக்கிறது. ‘இது ஓர் ஆன்மிக விழா இல்லை. இது ஓர் அரசியல் நிகழ்ச்சி. கோயில் கட்டுமானத்தை அரசியல்மயப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, விழாவைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறோம்.’ என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ், ‘நம் நாட்டில், ராமரை கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்த ஒன்று. ஆனால், பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை ஓர் அரசியல் செயல் திட்டமாக வைத்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே, அதன் திறப்பு விழாவை நடத்துவது தேர்தல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது’ என்று கூறியிருக்கிறார்.
`பா.ஜ.க வைத்த பொறியில் எதிர்க்கட்சிகள் சிக்கவில்லை. ராமர் கோயில் திறப்பு விழா முழுக்க முழுக்க பா.ஜ.க நடத்துகிற ஒரு விழா போல மாறியிருக்கும் சூழலில், அதைப் புறக்கணிப்பதால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது. அதே நேரம் வரும் காலங்களில் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இதனை பாஜக கையிலெடுக்கும் விதமும் அதனை இக்கட்சிகள் எதிர்க்கொள்ளும் விதத்தையும் பொறுத்து தான் முழுமையாக சாதகமா பாதகாமா என்பது தெரிய வரும்’ என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
