தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாகவே அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்வின் அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், தமிழக பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கும் பொது வினாத்தாள் முறையையே கடைபிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறையை அமல்படுத்தப்பட உள்ளது.
Also Read : மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… நாளை முதல் இதற்கும் கட்டணம் உயர்வு..! அமலாகும் புதிய நடைமுறை!!
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அட்டவணையின்படி, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இவற்றில், 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in
