சல்மான்கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘கிக் 2’

செய்திப்பிரிவு

Last Updated : 11 Mar, 2024 11:35 AM

Published : 11 Mar 2024 11:35 AM
Last Updated : 11 Mar 2024 11:35 AM

மும்பை: ‘தர்பார்’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். இந்தப் படம் சல்மான் கான் நடித்து வெளியான ‘கிக்’ படத்தின் அடுத்த பாகம் என்று கூறப்படுகிறது.

ரவிதேஜா நடித்து தெலுங்கில் ஹிட்டான படம் ‘கிக்’. இதன் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். அதன் அடுத்த பாகமான ‘கிக் 2’ -வை அவர் நடிப்பில் முருகதாஸ் இயக்க இருக்கிறார். இதன் முதல் ஷெட்யூல், மே மாதம் தொடங்க இருக்கிறது. இது சிறிய ஷெட்யூல் என்றும் ஜூலை முதல் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும் என்றும் தெரிகிறது. அதற்குள் அவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!




Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *