“உண்மையை தெரிந்துகொள்ள உதவும்” – ‘ஆர்டிகிள் 370’ படத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஸ்ரீநகர்: ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஆர்டிகிள் 370’ திரைப்படம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். தனது உரையின் இடையே, இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘ஆர்டிகிள் 370’ படத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஒரு காலத்தில் ஜம்மு – காஷ்மீரில் பள்ளிகள் எரிக்கப்பட்டன, இன்று பள்ளிகள் அலங்கரிக்கப்படுகின்றன. இன்று, சுகாதார வசதிகள் வேகமாக மேம்பட்டு வருகின்றன. 2014க்கு முன் ஜம்மு-காஷ்மீரில் 4 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் தற்போது 12 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370வது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது. பாஜக அரசு அதை நீக்கியுள்ளது. இப்போது ஜம்மு-காஷ்மீர் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால், தேர்தலில் பாஜக 370 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களையும் வெல்ல உதவுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வாரம் ஆர்டிகிள் 370 பற்றிய படம் ஒன்று வெளியாவதாக கேள்விப்படுகிறேன். மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள இப்படம் உதவும் என்பது நல்ல விஷயம்” என்று தெரிவித்தார்.

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது. ‘ஆர்டிகிள் 370 ட்ரெய்லர்:

Article 370 | Official Trailer | Yami Gautam, Priya Mani | 23rd Feb 2024 | Jio Studios | B62 Studios

'+divToPrint.innerHTML+'