சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 12 அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இப்போது இந்திய சந்தையில் iQOO 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 ப்ராசஸர், மேம்படுத்தப்பட்ட கேமரா திறன் போன்ற அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த வகை ப்ராசஸர் கொண்டு அறிமுகமாகி உள்ள ஒரே ஸ்மார்ட்போன்.
சிறப்பு அம்சங்கள்
- 6.78 இன்ச் 1.5கே எல்டிபிஓ ஓஎல்ஐடி டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 ப்ராசஸர்
- 50 + 50 + 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 5,000mAh பேட்டரி
- 120 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை ரூ.52,999 முதல் தொடங்குகிறது
- வரும் 14-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. விலையில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன
Experience the Cool New Mountain Kinetic Wallpapers which move to the peak with every step count in the new #FuntouchOS14 based on #Android14
Watch Now: https://t.co/h6RTIvKymg
Know More: https://t.co/0rC6Ys3QFB#iQOO12 #BeTheGOAT #AmazonSpecials pic.twitter.com/RbOLcmFuD0
— iQOO India (@IqooInd) December 12, 2023
