பிரேசிலில் ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட நிறைமாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் பாரைபா மாகாணத்தில் உள்ள காம்பினா கிராண்டேவில் அமைந்துள்ள மான்டே காஸ்டெலோ பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் கரோலெய்ன் (17). இவர், நிறைமாத கர்ப்பிணியான இவர், குளித்து முடித்துவிட்டு வந்து, ஈரத்துடன் தனது போனை சார்ஜ் போட முயன்றிருக்கிறார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த கணவர், அவசர உதவியை அழைக்க, போலீசாருடன் வந்த அவசர உதவிக்குழுவினர் ஜெனிபரை பரிசோதிக்கும்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரித்தனர். மின்சாரம் தாக்கியதில் அவரது வயிற்றிலிருந்த 9 மாத குழந்தையும் இறந்துவிட்டது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com
