ஜோரம் மக்கள் இயக்கத்தின் உருவாக்கம்:
மிசோரம் மக்கள் மாநாடு(Mizoram People”s Conference), ஜோரம் தேசியவாதக் கட்சி(Zoram Nationalist Party), ஜோரம் எக்ஸோடஸ் இயக்கம்(Zoram Exodus Movement), ஜோரம் அதிகாரப் பரவலாக்கல் முன்னணி(Zoram Decentralisation Front), ஜோரம் சீர்திருத்த முன்னணி (Zoram Reformation Front,) மிசோரம் மக்கள் கட்சி (Mizoram People’s Party) ஆகிய ஆறு மாநிலக் அமைப்புகளின் கூட்டணியாக ஜோரம் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சிகள் பின்னர் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக ஒன்றிணைந்து, அதிகாரப்பூர்வமாக ஜோரம் மக்கள் இயக்கத்தை (Zoram People’s Movement) 2018-ல் உருவாக்கினர்.


தொடக்கத்தில், மிசோரம் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. தொடர்ந்து, சமூக அக்கறை மற்றும் சமூக நலனில் கவனம் செலுத்தும் அரசியல் அல்லாத அமைப்பாக உருவானது. இந்த நிலையில்தான், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கட்சியை அதிகாரப்பூர்வமான கட்சியாகப் பதிவு செய்தது. ஆனால், ZPM அரசியல் கட்சியாக மாறியப் பிறகு, மிசோரம் மக்கள் மாநாடு, 2019-ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.
நன்றி
Publisher: www.vikatan.com