ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 2021-ல், `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர். அதே வேகத்தில், தெலங்கானா முழுவதும் 3,800 கிமீ நடைபயணமும் மேற்கொண்டார். முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி ஆட்சிக்கு எதிரான தீவிர எதிர்ப்பு அரசியல் செய்துவந்த ஷர்மிளா, ஒரு கட்டத்தில் தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸுடன் தன்னுடைய கட்சியை இணைக்கப்போவதாகப் பேச்சுக்கள் எழுந்தன.
அதற்கேற்றார் போலவே, கடந்த செப்டம்பரில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார் ஷர்மிளா. இருப்பினும் அதன் பிறகு கொஞ்ச நாள்களிலேயே, தேர்தலில் தனித்து களமிறங்குவதாக ஷர்மிளா தெரிவித்தார். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், காங்கிரஸுக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் ஷர்மிளா அறிவித்திருக்கிறார். இந்த முடிவு குறித்து காங்கிரஸ் எம்.பி குறித்து ராகுல் காந்திக்கு, கடிதமும் அனுப்பியிருக்கிறார் ஷர்மிளா.
நன்றி
Publisher: www.vikatan.com
