தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வசித்து வருபவர், சிவசேகர். அரசு பள்ளி ஆசிரியரான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். ஜெயந்தியும் ஆசிரியையாக வேலை செய்து வரும் நிலையில், கணவன், மனைவி இருவரும் கடந்த 26ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் வீட்டில் சிவசேகரின் தாய், பெருமா மற்றும் அவரது வயதான உறவினர் ஒருவருவரும் இருந்துள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பெருமாவிடம், நான் ஜெயந்தியின் தோழி என்று கூறி அவர்களிடம் நலம் விசாரித்து பேச தொடங்கியுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த உறவுக்கார முதியவர், தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.
முதியவர் பேருந்தில் ஏறியதை உறுதி செய்த அந்த பெண், தனியாக இருந்த மூதாட்டியிடம் ஆப்பிள் பழங்களுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் தான் கொண்டு வந்த ஆப்பிளை துண்டுதுண்டாக வெட்டி மூதாட்டியிடம் கொடுத்துள்ளார். பாசத்தோடு கொடுக்கிறார் என்று நினைத்த மூதாட்டி ஆப்பிளை சாப்பிட்டுள்ளார். ஆனால் சாப்பிட்ட சில நிமிடங்களில் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 சவரன் தங்க நகைகளை எடுத்து கொண்டு காரில் ஏறி தப்பித்து சென்றுள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com
