விவாகரத்து பெறும்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பணம் மற்றும் சொத்துகளை வாங்கிக்கொண்ட பிறகு, கணவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மனைவி மீறியதான வழக்கு ஒன்று, மும்பை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது.
புனேயை சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பிள்ளை இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு கணவர், மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி கணவர் ஒரே தவணையாக 12 லட்சம் பணம் மற்றும் ஒரு வீட்டை மனைவிக்குக் கொடுக்க சம்மதித்தார்.

அதோடு கணவரின் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் மனைவியின் பெயரை சேர்க்கவும் கணவர் சம்மதித்தார். அதே நேரம், கணவர் மீது கொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெறவும், குழந்தையை பார்க்க அனுமதிக்கவும் மனைவி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால் ஒப்பந்தப்படி மனைவி வழக்கை திரும்ப பெறவில்லை. இதையடுத்து செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடக்க உத்தரவிடும்படி கோரி, கணவர் தரப்பில் குடும்பநல நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com
