தன் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அறிந்து கொள்ளபல முயற்சிகளை மேற்கொண்டதை குறித்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் விளக்கி இருக்கிறார்.
அதோடு கணவர் மீது எச்சில் துப்பினார் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் நீதிமன்றத்தில் கொடுக்கப்படவில்லை.
இது குறித்து கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இவர்களின் வழக்கில் பத்து வருடங்கள் பிரிந்து இருந்ததன் காரணமாகத் திருமண உறவே இல்லாமல் போய்விட்டது.
எனவே சட்டபூர்வமாக, ஒரு தரப்பினர் ஒருதலைபட்சமாக விவாகரத்தை நியாயப்படுத்த போதுமான காரணங்களை வழங்காதபோது திருமண உறவில் இருந்து வெளியேற முடியாது.
முறையீட்டாளர், கொடுமையின் மற்றொரு காரணமாக மனைவிக்கு சமைக்கத் தெரியாது. அதனால் அவர் துணைவருக்கு உணவு கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
மனைவி சமைக்காமல் இருப்பதைக் கொடுமையாகக் கருத முடியாது. சட்டபூர்வ திருமணத்தைக் கலைக்க இதை கொடுமையான காரணம் என்று கூறமுடியாது’ என்று கூறி விவாகரத்து மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com
