Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த 25ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று பலத்த போலீஸ் காவலுடன் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 9-வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர்.
கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்தால்தான் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
அதன்படி, கருக்கா வினோத்தை நவம்பர் 1ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிண்டி போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பெட்ரோல் குண்டு வீசியது ஏன்..? ரவுடி கருக்கா வினோத்துக்கு 3 நாள் போலீஸ் காவல்..!! நீதிமன்றம் அதிரடி..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com