நம்மிடம் பேசிய அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் கூட்டணியிலிருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க வெளியேறியது. பா.ஜ.க-வுடனும் கூட்டணி இல்லை என அடித்துச் சொல்கிறார்கள். ஆனால், யாருடன் கூட்டணி என்ற தெளிவில்லாமல்தான் அ.தி.மு.க இந்தத் தேர்தலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இப்போதைக்கு புரட்சி பாரதம் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகியவை மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாக அறிவித்திருக்கின்றன. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனோ அ.தி.மு.க – பா.ஜ.க விரைவில் இணைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். புதிய தமிழகம் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணியோடுதான் பயணிக்கும். மற்றபடி தி.மு.க கூட்டணியிலிருந்து சில கட்சிகளும், சில அமைப்புகளும் அ.தி.மு.க கூட்டணியில் வந்து இணையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.” என்றவர்கள்,
“எது எப்படியோ, கூட்டணி குறித்து ஜனவரிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அப்படி அறிவிப்பு வந்தால்தான் யாரோடு இணைந்து செயல்படப் போகிறோம் என்ற தெளிவோடு தேர்தல் வேலைகளைச் செய்ய முடியும். கடைசி நேர அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை. இதைப் புரிந்துகொண்டு தலைமை விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்றனர்.

“இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. தெளிவில்லாமல் எதையும் பேசத் தலைமை விரும்பவில்லை. ஆனால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்” என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை சீனியர்கள். தி.மு.க., தனது வழக்கமான அணியிலும், பா.ஜ.க-வும் ஒரு தெளிவோடும், சில கணக்குகளோடும் இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-தான் தங்கள் கூட்டணியில் யார் வருவார்கள், யார் விலகுவார்கள் என்ற தெளிவில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. அந்தத் தவிப்பை போக்கவேண்டிய பொறுப்பு தலைமையிடம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
