மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் உதவியாளர்களிடம் பணம் கொடுத்தவர்கள். அவர்கள் நேர்காணல் முடிந்த பின், சண்முகம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை நேரில் சந்தித்துள்ளனர். பணி நியமன ஆணை வழங்க எவ்வித இட ஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கு, நேர்காணல் மதிப்பெண்ணை மாற்றி, தரவரிசை பட்டியலில் முன்னிலைப்படுத்தி பணி ஆணை வழங்கி உள்ளனர். செந்தில் பாலாஜியின் சார்பில் போக்குவரத்து துறைக்கு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை விசாரிப்பது யார் என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அவர் மீதான குற்றப்பத்திரிகையில் உள்ள சில விஷயங்கள் கசிந்திருப்பது செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
