அதைத்தொடர்ந்து, தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 12 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்மீது, தேசிய கீதத்தை அவமதித்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இந்த நிலையில், தற்போது அதே விவகாரத்தில் மேலும் ஐந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கின்றனர். இரண்டையும் சேர்த்து மொத்தமாக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 17 பேர்மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், “சுவேந்து அதிகாரி ஒரு திருடன் என்பது மேற்கு வங்க மக்களுக்குத் தெரியும். பா.ஜ.க-வினரே அவரை திருடன் என்று அழைத்தனர். பின்னர், கைதுசெய்யப்படாமலிருப்பதற்காகவே பா.ஜ.க-வில் சேர்ந்தார் அவர். அவர்கள் (பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்) அனைவரும் தேசிய கீதத்தை அவமதித்தனர். அதனால்தான், சட்டப்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
