விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் விவரங்கள்:
பதவியின் பெயர் | எண்ணிக்கை | மாத ஊதியம் | தகுதி |
பல் மருத்துவர் (Dental Surgeon) | 1 | 34,000 | இளங்கலை பல் மருத்துவ படிப்பு (பிடிஎஸ் ) |
பல் மறுத்துவ உதவியாளர் (Dental Assistant) | 1 | 13,800 | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் (Programe Cum Administrative Assistant) | 1 | 12,000 | ஏதேனும் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் மென்பொருள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அலுவலக மேலாண்மை பணிகளில் ஓராண்டு முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும் |
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001.
இதையும் வாசிக்க: தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்…. ரூ.50,000 வரை சம்பளம் – இந்து அறநிலையத் துறையில் சூப்பர் வேலை
இதர விவரங்கள்:
1. விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (SpeedPost) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன
2. விண்ணப்ப படிவங்கள் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் வட்டார சுகாதார நிலைங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
2. இதற்கான, மின்னஞ்சல் முகவரி vnrnhm@gmail.com
4. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
5.திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்(Program, cum Administrative Assistants) பதவிக்கு வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com