பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இதுவரை 191 சாட்சிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே சந்தேகத்துக்குரி நபர்கள் 25 பேரிடம் மரபணு பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் 4 பேரிடம் இன்னும் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும்!” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணனின் இடைக்கால அறிக்கையில், `காவல்துறை விசாரணை மிகவும் மந்தநிலையில் நடக்கிறது’ என குற்றம்சாட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், `வேங்கைவயல் இடைக்கால அறிக்கையை பாதுகாப்பாக வைக்கவும்’ எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் கையளித்தனர்.
மேலும், `வேங்கைவயல் விவகாரம் தொடர்பான இந்த வழக்கின் சிபிசிஐடி விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யவேண்டும்’ என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கின்றனர்.

`தமிழ்நாடு அரசு தரப்பு சார்பில் சிபிசிஐடி விசாரணை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகுதான், வழக்கின் அடுத்தகட்ட நிலையை உறுதிப்படுத்த முடியும்; கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் ஒருவரைக்கூட, இதுநாள் வரை கண்டுபிடித்து கைதுசெய்யமுடியாமல் கிட்டதட்ட 10 மாதங்களாக கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. சிபிசிஐடியும் கண்டுபிடிக்காத நிலையில், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு பரிந்துரைக்கவும் முகாந்திரம் இருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
