திருச்சியில் டிசம்பர் 29-ம் தேதி நடக்கவிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்` மாநாட்டை ஒத்திவைக்க திருமாவளவன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுவிருந்த மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டுமொரு முறை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த விசாரித்தோம்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தனது பிறந்தநாளன்று வெல்லும் `ஜனநாயகம் மாநாடு` குறித்த அறிவிப்பை வெளியிட்டார் வி.சி.க தலைவர் திருமாவளவன். அதனை தொடர்ந்த 144 மாவட்டச் செயலாளர்களுக்கு மாநாட்டு பணிகளை தொடங்கும்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட `இந்தியா` கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் சென்னையில் மிக்ஜாம் புயலால் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டதாலும் டிசம்பர் 23-ல் நடைபெறவிருந்த மாநாட்டை டிசம்பர் 29-ம் தேதிக்கு மாற்றி அறிவித்தார் திருமாவளவன். இந்நிலையில் டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. ஆகவே மாநாட்டை மீண்டுமொரு ஒத்திவைத்திருக்கிறது வி.சி.க.
நம்மிடம் பேசிய வி.சி.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர் “தமிழகத்தின் வட மற்றும் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீள இன்னும் ஒருவார காலம் ஆகலாம். அதே சமயம் தமிழகத்தில் மழை தொடரும் என்றும் வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. ஆகவே இந்நேரத்தில் மாநாட்டை நடத்துவது சரியாக இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் கருதுகிறார்.

இதுகுறித்து அனைத்து மாவட்டச் செயலாளரிடன இணைய வாயிலாக கருத்து கேட்டார். பெரும்பாலான மாவட்டச் செயலாளர் மாநாட்டை தள்ளிவைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆகவே `வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டை ஒத்திவைக்கிறோம். மறுபக்கம் தமிழகமெங்கும் மழைவெள்ள பாதிப்புகளை சீர்செய்யும் நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படுவதால் முதலமைச்சர் உள்ளிட்ட இதர தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதும் காரணங்களுள் ஒன்று” என்றனர்.
இதனை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார். “புயல், மழை, வெள்ளம் காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. டிசம்பர் 26 முதல் 30-ம் தேதிகளில் மழை பெய்யக் கூடும் என தகவல் இருப்பதாலும், ’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாலும் மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு” என முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தி.மு.க இளைஞரணி மாநாடு கடந்த டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட பெருமழையால் மாநாட்டை டிசம்பர் 24-ம் தேதிக்கு மாற்றி வைத்தது தி.மு.க. தென்மாவட்ட பெருமழைக்கு பிறகு மாநாட்டை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருப்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
