“தமிழகத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர என்ன காரணம்?”
“காலம் காலமாகச் சாதிய அடக்குமுறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்துமதம் என்று ஒன்று இருக்கும்வரை சாதிகள் இங்கு இருந்துகொண்டேதான் இருக்கும். இந்து மதத்தை அம்பேத்கரும், பெரியாரும் எதிர்த்ததற்குக் காரணமும் அதுதான். இங்கிருக்கும் சாதியை எடுத்துவிட்டால் இந்துமதம் இருக்காது. இதனை உடைத்தெறியத்தான் பெரியார் தொடங்கி அண்ணா, கலைஞர், திருமாவளவன் எனப் பலரும் போராடி வருகிறோம். இந்த தலைவர்களின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு சமூகநீதி பேசும் ஒரு அரசு இருந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.”

“நீங்கள் சொல்வதுபோல, `தி.மு.க., பெரியார், அண்ணா கருத்தை ஏற்றுக்கொண்டு, சமூக நீதி பேசும் அரசு’ என்று தானே தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள் . ஏன் இந்த அரசால் மாற்றம் நிகழாதா?!”
“உத்தரப்பிரசேதத்தில் ஒரு மாணவி பாதிக்கப்படுகிறார். மேல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்வதை, கீழ் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒத்துக்கொண்டுதான் வாழவேண்டும் என்று ஆளும் அரசின் ஒரு அமைச்சரே சொல்கிறார். இங்கு அப்படி ஒரு நிலை இருக்கிறதா? தவறு செய்தவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தகுந்த தண்டனை கிடைக்கிறது. தமிழக்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. நாம் கொள்கையை உள்வாங்கிக்கொண்டதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதும் இந்த அரசு சாதி ஒழிப்புக்கு இன்னும் பல முன்னெடுப்புகளை எடுக்கவேண்டும்.”
நன்றி
Publisher: www.vikatan.com
