அந்தநிலையில்தான் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்துக்கு மாற்றாக, அதற்கு சவால் விடுக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், ` இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் IMEC – India-Middle East-Europe Economic Corridor எனும் மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிவித்தனர். அப்போது பேசிய இந்தியப் பிரதமர் மோடி, “IMEC பொருளாதார வழித்தட திட்டம் உலக வர்த்தத்தின் அடித்தளமாக அமையும். அதற்கான முயற்சி இந்திய மண்ணில் எடுக்கப்பட்டிருப்பது உலக வரலாற்றில் இடம்பெறும்!” எனப் பெருமிதம் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், IMEC திட்டம் முதற்கட்டமாக இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் தொடங்கி, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளைக் கடந்து இஸ்ரேல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீஸ் நாடு வரைக்கும் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் இந்த திட்டத்தில் இஸ்ரேலும் அங்கம் வகிப்பதுதான். ஏற்கெனவே பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பகை உணர்வு இருக்கிறது. பல அரபு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்க மறுக்கின்றன.


இந்த இக்கட்டானச் சூழலில் IMEC பொருளாதார வழித்தட திட்டத்தை இருதரப்பு சம்மதத்துடன் கொண்டுபோகும் சவால் இந்தியாவுக்கு இருந்தது. இருப்பினும் பொருளாதார நலனுக்காக இந்தியா மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் ஒருமனதான இணைந்து இந்தத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இதனால், பாலஸ்தீனம் – ஹமாஸ் அமைப்புக்கு இதுவரை ஆதரவளித்து வந்த அரபு நாடுகளின் ஆதரவு கையைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஹமாஸ் அமைப்புக்குத் தோன்றியிருக்கலாம். ஹமாஸின் இந்த அச்ச உணர்வுதான் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இஸ்ரேல் மீதான தாக்குதலாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பி இருக்கிறார் பைடன்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com