மத்திய அரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் ரூ.450 கோடி என்பது மத்திய அரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில நிதியில் இருந்தே நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன” என கொதித்திருக்கிறார்.
இதேபோல் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “கடந்த 2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாகச் சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் மொத்தமாக ரூ.1,27,655.80 கோடியை கோரியிருக்கிறது, தமிழக அரசு. இதில் ரூ.5,884.49 கோடியை மட்டுமே விடுத்திருக்கிறது, மத்திய பாஜக அரசு. இது தமிழ்நாடு அரசு கோரிய தொகையில் 4.61% மட்டுமே” என காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து எந்த சூழலில் தேசிய பேரிடர் அறிவிக்கப்படும் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் எழுப்பினோம். “மாநிலத்தில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 6% பேர் பாதிக்கப்பட்டிருந்தால் அது தேசிய பேரிடராக அறிவிக்கப்படும் என்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அதிதீவிர பாதிப்பு என சொல்கிறார்கள். அப்படிதான் உத்தரகாண்ட், ஆந்திரா பாதிப்பை அறிவித்தார்கள். அவ்வாறு செய்தால் உடனடியாக கூடுதல் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்.
மேலும் சம்மந்தப்பட்ட மாநில அரசு செலுத்த வேண்டிய கடன் போன்றவற்றுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். சில வரிகளை வசூல் செய்யக்கூடாது. மக்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. ஒருசில நேரங்களில் மட்டுமே இப்படி செய்கிறார்கள். எனவே தேசிய பேரிடராக அறிவிப்பது மத்திய அரசின் கையில் தான் இருக்கிறது. குஜராத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு உடனே ரூ.1,000 கோடி வழங்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது, மத்திய அரசு” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com