
தமிழகத்தில் பொதுவாக கார்த்திகை மாதங்களில் மழை பெய்வது வழக்கம். அந்த வகையில், தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்த நிலையில், தற்பொழுது ஓய்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
மேலும், இந்த மிக்ஜாம் புயலானது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்தது. தற்போது இந்த புயலானது 210 கிமீ தொலைவில் விலகிச் சென்றதால் தற்போது சென்னையில் மழை குறைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரும் வடிந்து வருகிறது.
ALSO READ : சென்னையில் மிக்ஜம் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
இந்நிலையில், தற்பொழுது வானிலை மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்புள்ள 10 மாவட்டங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
