
இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. அவற்றின் ஒரு பகுதிதான் டிஜிட்டல் பணபரிவர்த்தனை. இப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. அந்த வகையில், ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளில் Google Pay ஒரு சிறந்த செயலியாக உள்ளது. மற்ற செயலிகளை காட்டிலும் கூகுள் பே செயலியை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக பெரிய பெரிய கடைகளில் மட்டுமே ஆன்லைன் பரிவத்தனை முறையை பார்க்க முடிந்தது. ஆனால், தற்பொழுது சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பணம் அனுப்ப, பணம் பெற மற்றும் ரீசார்ஜ் செய்ய போன்ற எந்தவொரு சேவைகளுக்கும் கட்டணம் இன்றி பரிமாற்றம் செய்து கொள்ளும்படியான கட்டுப்பாட்டை விதித்தது.
ALSO READ : தமிழ்நாட்டை குறிவைக்கும் “மிஜ்சம்” புயல்..! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!
இந்நிலையில், தற்பொழுது கூகுள் பே இந்த கட்டுப்பாட்டை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இனி கூகுள் பே மூலம் மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் கட்டணம் வசூலிக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கூகுள் நிறுவனம் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர் ஒருவர் இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்துள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டில், ஜியோ ரீசார்ஜ் பிளானில் 749 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.3 கட்டணமாக பிடிக்கப்பட்டிருந்தது.
இதனை அந்த வாடிக்கையாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ரூ.100 க்கும் கீழ் ரீசார்ஜ் செய்தால் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்றும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்தால் ரூ.2 கட்டணமாகவும் ரூ.200 க்கு மேல் ரீசார் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கட்டணம் தொடர்பாக கூகுள் நிறுவனம் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் தற்பொழுது வரை வெளியிடப்படாததால் மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
