05.10.2023 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நம்ம உடல் இயங்குவதற்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமான ஒன்று. அதுபோல தான் வாகனங்கள் பெட்ரோல், டீசல் இல்லாமல் ஓடாது. அந்த பெட்ரோல், டீசல் போடுவதற்கே மக்கள் யோசிக்கிறார்கள். ஏன் என்றால் நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல், டீசல் விலை காரணமாகத்தான். மேலும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறுகிறதே தவிர குறைந்தபாடில்லை.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 502 நாட்களாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
அதன்படி,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 102.63 க்கு விற்பனையாகிறது. மேலும் டீசல் ரூ. 94.24 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in