
தமிழக அரசு பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க கல்வி உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம் மூலம் உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், பெண்களுக்காகவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டம் தகுதியுடைய பெண்களின் வங்கி கணக்கில் மாதம் மாதம் ரூ.1000 வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தினை கடந்த மாதம் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தமிழம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் தகுதியான 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு கடந்த மாதம் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த மகளிர் உரிமைத்திகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் பலரும் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அக்டோபர் மாதத்திற்கான உரிமைத்தொகை எப்பொழுது வழங்கப்படும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்த நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதி வங்கியில் செலுத்த உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்த மாதம் பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல்முறையீடு செய்தவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருத்தல் கூடாது, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இருக்க வேண்டும், அரசு வேலையில் இருக்க கூடாது, வருமான வரி செலுத்தாதவர்களுக்கும், முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற அரசு சார்ந்த ஒய்வூதியம் பெறாதவர்களுக்கு மட்டுமே இந்த மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in