
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கும் 9 மாணவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நிறைய சலுகைகளை செய்துகொண்டு வருகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர் படிப்பை தொடர ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நிறைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் சேரும் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்றுக்கொள்கிறது.
இந்த நிலையில் முதல்வர் அவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதாவது இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் படிக்கும் 9 மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
நன்றி
Publisher: jobstamil.in
