
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதன்பிறகு, தற்பொழுது மிக்ஜம் புயலால் மீண்டும் சென்னை வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ : தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு..! இன்றைய நிலவரம்…
இந்நிலையில் மிக்ஜம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடமான அண்ணாநகர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று(டிசம்பர் 15) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிக்ஜம் புயலால் பாதிகப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், குடும்ப இல்லாதவர்களுக்கும் தமிழக அரசின் நிவராணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in