
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2 போன்ற பல்வேறு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் தேர்வை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணை கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால், மிக்ஜம் புயலால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
ALSO READ : வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
இதன் காரணமாக திருத்தப்பட்ட புதிய Result Declaration அட்டவனையை TNPSC வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 அன்றும், குரூப் 1 அறிவிப்பு வவிரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான முழு விவரங்களை அறிய TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
